Wednesday, December 12, 2012

அர்த்தமில்லா எழுத்துக்களின் பயணம் ..!





அர்த்தமில்லா எழுத்துக்கள் 
எல்லாம் ஒன்றாக சேர்ந்து 
தனது அர்த்தங்களை தேடி 
பயணம் செய்தது ..

பயணங்களில் 
தனது 
கோர்வை தவறா ?
தனது 
ஓசை தவறா ?
தனது 
வடிவம் தவறா ?
என சிந்தித்தபடி இருந்தது ..

இல்லை 
தன்னை படிப்பவரின் 
மனம் தவறா ?
குணம் தவறா ?
சினம் தவறா ?
என சிந்தித்தது ..


சிந்தனையில் 
வழிமாறி 
இடம்மாறியது 
எங்கேயோ பயணம் செய்தது ..
அந்த பயணங்கள் 
நீண்டது பல ஆண்டுகள் ..

முன்னம் 
இருந்த அர்த்தங்களை 
எங்கே தொலைத்தேன் 
என வழிஎங்கும் தேடியது ..

சில எழுத்துக்கள் 
வேதனையில் 
கண்ணீர் சிந்த 
சிறிது மெலிந்து 
கரைந்து 
தனது வடிவம் மாறியது ..

சில எழுத்துக்கள் 
புதிய பயணம் 
என்ற மகிழ்ச்சியில் 
சற்று பெருத்து 
தனது வடிவம் மாறியது ..

சில எழுத்துக்கள் 
தனது வடிவம் மாறாமல் 
அங்கேயே தனது 
வாழ்வை முடித்துக்கொண்டது ..

மாறிய வடிவங்களில் 
அது புது அர்த்தம் தர 
அந்த எழுத்துக்கள் யாவும் 
தனது பயணங்களை 
முடித்துகொண்டது 
தனது புது வாழ்கையை 
தொடங்கியது ....

1 comment:

Ramani said...

பயணங்களில்
தனது
கோர்வை தவறா ?
தனது
ஓசை தவறா ?
தனது
வடிவம் தவறா ?
என சிந்தித்தபடி இருந்தது ..//



அருமை அருமை
அந்தச் சிந்தனைதானே எழுத்தை இன்னும்
அதிகம் செழுமைப் படுத்துகிறது
வெற்று அலைச்சலாய் இருந்த எழுத்தை
இலக்கு நோக்கி பயணப் படவைத்து
உன்னதப்படுத்துகிறது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்