Friday, November 9, 2012

இடையில் ...!



ஒரு கண்ணீருக்கும் 
புன்னகைக்கும்
இடையில் இருக்கிறது 
ஆறுதல் ..

ஒரு புன்னகைக்கும் 
கண்ணீருக்கும் 
இடையில் இருக்கிறது 
துரோகம் ...

கோபத்திற்கும் 
பொறுமைக்கும் 
இடையில் உள்ளது 
பல உறவுகள் ..

பொறுமைக்கும் 
கோபத்திற்கும் 
இடையில் இருக்கிறது 
நமது வன்மம் ..

ஆசைக்கும் 
நிஜத்திற்கும் 
இடையில் உள்ளது 
முயற்சி ..

நட்புக்கும் 
காதலுக்கும் 
இடையில் இருப்பது 
ஓர் அழகிய
பெயரில்லா உறவு  ..


யுத்தத்திற்கும் 
அமைதிக்கும் 
இடையில் இருக்கிறது 
பல உயிர்கள் ..

மனிதனுக்கும் 
கடவுளுக்கும் 
இடையில் இருக்கிறது 
மதம் ...

மனிதனுக்கும் 
மனதிற்கும்
இடையில் எப்போதும் இருக்கிறது 
சிறு போராட்டம் ..

4 comments:

Dominic RajaSeelan said...

kavithai kavithai,

alagappan ramanathan said...

கவிஞனுக்கும்
கவிதைக்கும்
இடையில் இருப்பது
கற்பனை...

அந்த கற்பனை எனும் மேகம் கூடி,
கவிதை எனும் தூறலை பொழிந்து,
வறண்ட நிலம் போலுள்ள எங்கள் உள்ளங்களை குளிரவைக்கும்
எம் கவி-நண்பனுக்கு உளமார்ந்த நன்றிகள்.

அனத்தலாம் வாங்க said...

நட்புக்கும்
காதலுக்கும்
இடையில் இருப்பது
ஓர் அழகிய
பெயரில்லா உறவு ..


மிக அழகான வரிகள்....

www.anathal.com

Ramani said...

ஆழமான அற்புதமான சிந்தனை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்