Tuesday, April 10, 2012

எனக்கான கனவுகள் எனக்கு வந்ததே இல்லை ...!

எனக்கான கனவுகள்
எனக்கு வந்ததே இல்லை ...
என்னை சுற்றி இருப்பவர்கள்
எனக்கான கனவுகள் காண்கிறார்களாம்..
சொல்கிறார்கள் ..


எனக்கான கனவுகள்
என்னில் வருவதற்காக
இன்று வரை காத்திருகிறேன்..


ஆசைகள் இருந்தும்
கனவுகள் வருவதில்லை ..
தங்க கூண்டுக்குள்
சிறைப்பட்ட குயில் எப்படி சந்தோசமாய் பாடும் ..

என்ன வேடிக்கை இது ?
அவர்கள் மற்றவர் கனவுகளை சுமந்ததர்காக
என்னை அவர்கள் கனவுகளை சுமக்க சொல்கிறார்கள் ..

எனக்கான எனது கனவுகள்
இன்று வரை
எனது மனதின் அடியில்
சிறைபட்டு விடுதலைக்காக
காத்திருகிறது ...

எனது கனவை
அடுத்தவர் தோளில்
சுமத்தி வைக்க நான் விரும்பவில்லை ..
எனது கனவை
அவர்களில் நான் காண விரும்பவில்லை ..

எனது தூக்கத்தில் கூட
உள்ளுக்குள் தூங்கிக்கிடக்கும்
எனது கனவு விழித்துக்கொள்ள
பயப்படுகிறது ...
அதனால் ,
எனக்கான கனவுகள்
எனக்கு வந்ததே இல்லை ...

2 comments:

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

http://tamil.dailylib.com

To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

ஹேமா said...

குழந்தைகளின் இன்றைய நிலைமை.திணிக்கிறார்கள் பெற்றவர்கள் எத்தனையோ தங்கள் ஆசைகளை.விளையாடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள் சுமைகளோடு சின்னவர்கள் !