Sunday, January 29, 2012

ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும் ..!

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...


பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...

முதல் பார்வையில் ,
மயக்கம் தருகிறது
பரவசம் தருகிறது
வெட்கம் தருகிறது
தயக்கம் தருகிறது
வியப்பு தருகிறது ...

ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு தருகிறது
சிரிப்பு தருகிறது
மகிழ்ச்சி தருகிறது
ஆறுதல் தருகிறது
ஆசை தருகிறது ...

ஒவ்வொரு உணர்தலிலும் ,
பாசம் தருகிறது
காதல் தருகிறது ...

ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம் தருகிறது
சோகம் தருகிறது
திகைப்பு தருகிறது
மோதல் தருகிறது ...

ஒவ்வொரு கூடலிலும்
ஆனந்த கண்ணீர் தருகிறது
முன்னம் இருந்ததை விட
அதிகம் காதல் தருகிறது ..

ஒவ்வொரு தனிமையிலும் ,
மோகம் தருகிறது
தாகம் தருகிறது
காமம் தருகிறது ...

இறுதி சந்திப்பில் ,
அதிர்ச்சி தருகிறது
திகைப்பு தருகிறது
காயம் தருகிறது
தனிமை தருகிறது ...

தனிமையில் நினைவுகளில்
வலி தருகிறது
சிரிப்பு தருகிறது
சோகம் தருகிறது
சோக கண்ணீர் தருகிறது
வெறுமை தருகிறது ...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள் தருகிறது ...!

4 comments:

ஹேமா said...

அப்பாடி....நீங்கள் சொன்னபிறகுதான் யோசிக்கிறேன்.ஒரே பார்வைதான்.எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்.எரித்துக்கூட விடுகிறோமே சிலசமயங்களில்.அருமையா வந்திருக்கு கவிதை ஜெயராம் !

manidam said...

"ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும்"- இவ்வளவு தந்ததா?
அருமை...

Ramani said...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள் தருகிறது ...!


ஒரே ஒரு பதிவுதான்
அது படிப்பவர் மனதில்தான்
எத்தனை ஜாலம் புரிகிறது .
நீங்கள் சொல்லிப் போகும்
அந்த ஒரே ஒரு பார்வைபோல
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

jayaram thinagarapandian said...

@all...
கருத்து தெரிவித்த அனைத்து
நெஞ்சங்களுக்கும் நன்றி :)