Sunday, January 29, 2012

ஒரே பார்வையும் ஒரே ஒரு புன்னகையும் ..!

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை ஜாலங்கள் செய்கிறது ...


பல்வேறு சூழ்நிலைகளில்
பல்வேறு தருணங்களில்
பல்வேறு காலங்களில்
எத்தனை உணர்ச்சிகளுக்கு
தாயாகிறது ...

முதல் பார்வையில் ,
மயக்கம் தருகிறது
பரவசம் தருகிறது
வெட்கம் தருகிறது
தயக்கம் தருகிறது
வியப்பு தருகிறது ...

ஒவ்வொரு சந்திப்பிலும் ,
பூரிப்பு தருகிறது
சிரிப்பு தருகிறது
மகிழ்ச்சி தருகிறது
ஆறுதல் தருகிறது
ஆசை தருகிறது ...

ஒவ்வொரு உணர்தலிலும் ,
பாசம் தருகிறது
காதல் தருகிறது ...

ஒவ்வொரு ஊடலிலும் ,
கோபம் தருகிறது
சோகம் தருகிறது
திகைப்பு தருகிறது
மோதல் தருகிறது ...

ஒவ்வொரு கூடலிலும்
ஆனந்த கண்ணீர் தருகிறது
முன்னம் இருந்ததை விட
அதிகம் காதல் தருகிறது ..

ஒவ்வொரு தனிமையிலும் ,
மோகம் தருகிறது
தாகம் தருகிறது
காமம் தருகிறது ...

இறுதி சந்திப்பில் ,
அதிர்ச்சி தருகிறது
திகைப்பு தருகிறது
காயம் தருகிறது
தனிமை தருகிறது ...

தனிமையில் நினைவுகளில்
வலி தருகிறது
சிரிப்பு தருகிறது
சோகம் தருகிறது
சோக கண்ணீர் தருகிறது
வெறுமை தருகிறது ...

ஒரே பார்வை தான் ,
ஒரே புன்னகை தான் ,
ஆனால்
எத்தனை உணர்வுகள் தருகிறது ...!

Friday, January 27, 2012

அலைகளின் பேச்சு

கரை தொட்டுவிட்டு
பின் செல்லும் அலைகள் யாவும்
எதோ ஒன்றை
கரையின் மேல்
நுரையாய் எழுதிவிட்டு செல்கிறது ..



எழுதிவிட்டு செல்லும் பொழுது
எதோ ஒன்றை கரையிடம்
சத்தமாக பேசிவிட்டு செல்கிறது ..

அந்த
அலைகளின் எழுத்துக்களை
படித்துவிட முயற்சிக்கிறேன் ..
புரியவில்லை ...

அந்த
அலைகளின் சத்தத்தை கேட்டு
அதன் மொழியை
புரிந்து விட முயற்சிகிறேன்
விளங்கவில்லை ..

தரையாக இல்லாததால்
என்னவோ
அதை
படிக்கவோ
கேட்கவோ முடியவில்லை ..

முயன்று அதை படிக்க
முயலும் பொழுது
அது எழுதும் எழுத்துக்கள் யாவும்
ஒவ்வொருமுறையும்
ஒவ்வொரு அர்த்தம் தருகிறது

ஒவ்வொரு முறை
அந்த பேச்சை கேட்கும் பொழுதும்
அது வெவ்வேறாக ஒலிக்கிறது ...

சிறிதாய் எழுத்துக்கள்
புரிந்த வேளையில்
அலைகள் வந்து அதை அழித்துவிட்டு
புதிதாய் எழுதிவிட்டு செல்கிறது ...

சிறிதாய் ஓசைகள்
புரியும் போது
அது தன் பேச்சை
நிறுத்திவிடுகிறது ...

கடைசிவரை அலைகளின்
பேச்சும் எழுத்தும்
புரியவில்லை ..

உலகிலிருக்கும்
பல்வேறு
புரியாத மர்மங்களைப்போல்
இந்த
பேச்சும் எழுத்தும்
மர்மமாகவே உள்ளது ...!

Monday, January 2, 2012

மௌனத்தின் சத்தங்கள் ...!

மௌனம் சத்தம் போடுமா ?
சற்று மெளனமாக சிந்தித்ததில்
அது
ஆம் என்றது சத்தமாக ...


!



மேலும் சில மௌனங்களின்
சத்தத்தையும் புரிய வைத்தது ...
மனதிலே பதிய வைத்ததது ...

என்னை விட்டுப் போய்விடுவாயா ?
என காதலியிடம் கெட்ட கேள்விக்கு
பதிலாய் வந்த மௌனம்
இன்னும் என் மனதில் சத்தம் போடுகிறது ...

எம் இன மக்கள்
எட்டிய தூரத்தில் இருந்தும்
கொத்து கொத்தாய் சாகையில்
இங்கு அமைதி காத்த மக்களின் மௌனம்
ஈழத்தில் குழந்தையின் அழுகையாய்
சத்தம் போடுகிறது ..

பேச வேண்டிய தருணங்களில்
நான் காத்த மௌனங்களே
இன்று வரை என் மனதில் சத்தம் போடுகிறது ..

நான் திட்டி போன வேளையில்
மௌனம் காத்த
என் தந்தையின் மௌனங்கள்
என்னை சத்தமாக குத்தி காட்டுகிறது ..

உயிரென கலந்த உறவுகள்
உயிர் அற்ற சவமாக மெளனமாக கிடக்கையில்
அந்த மௌனம் என் மனதில்
அழுகையை சத்தம் போடுகிறது ..

இப்பொழுது சொல்லுங்கள்
மௌனம் சத்தம் போடும் தானே ...

-----------------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


--