Monday, October 24, 2011

மரத்துப்போன உணர்ச்சி என ஓர் உணர்ச்சி ..!

தவறின் புள்ளியில் ஆரம்பித்த
அந்த உணர்ச்சியின் பயணம்
புள்ளியின்
மையத்தின்
நேரான கோட்டில்
வெளியில் இருந்து
உள்ளாக
பயணித்து கொண்டிருகிறது ..



சிலவற்றை மறந்து
போனதாலும் ,
சிலர் சிலவற்றை மறந்து
போனதாலும்
அந்த உணர்ச்சி
இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது ..

காற்றின் நெளிவு சுளிவுகள் இசையாவதின்
தலை கீழ் நிகழ்வு போல ,
சில அழகிய உணர்சிகளின் மோசமான பயணங்கள்
இந்த விளைவிற்கு
வித்திட்டது ..

மரணித்து போய்,
உயிர் மட்டும் மிச்சமாக
சில சம்பவங்களின் எச்சமாக
இருக்கும் உடல்களில்
இந்த உணர்ச்சி வெளிப்படையாகவே
வெளிபடுகிறது ,
வெளிச்சம் தொலைந்து போன இடத்தில்
பிரகாசமாக தெரியும்
இருளை போல்..

மனம் என்ற ஒன்று
மனிதனிடமிருந்து தொலைந்து போனதால் ,
மரத்துப்போன உணர்ச்சி தனக்கான
நிரந்தர இடத்தை மனிதனிடம் தேடிக்கொண்டது .


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


6 comments:

Ramani said...

மனம் என்ற ஒன்று
மனிதனிடமிருந்து தொலைந்து போனதால் ,
மரத்துப்போன உணர்ச்சி தனக்கான
நிரந்தர இடத்தை மனிதனிடம் தேடிக்கொண்டது //

மனம் கவர்ந்த வரிகள்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
இனிய தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்
த.ம 1

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

suryajeeva said...

சபாஷ்

jayaram thinagarapandian said...

@ramani..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..

அன்புடன்
ஜெயராம்

jayaram thinagarapandian said...

@மகேந்திரன் ...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே ..

அன்புடன்
ஜெயராம்

jayaram thinagarapandian said...

@suryajeeva...
:)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

அன்புடன்
ஜெயராம்