Saturday, October 8, 2011

கலங்காத கண்கள்..!

கலங்காத கண்கள்
உண்மை பலசாலி ...
மனதிற்கு
எவ்வளவு வலி வந்தாலும்
கண்ணீரின்,
பாரத்தை விடாமல் சுமக்கும் ..



மனதின் உண்மை காதலன்
கண்கள் தான் ..
காயம் மனதிற்கு
கண்ணீர் பாரம் சுமப்பது கண்கள் அல்லவா ..

தூசி பட்டு
கலங்கும் கண்களை விட ,
காட்சி பட்டு
கலங்க துடிக்கும்
கண்களின் வலி அதிகம் ..

வலிவந்து ,
பிரசவிக்காத தாயின் பாரம்தான்
இந்த கண்களுக்கும் இப்போது ,
வெளிச்சதில்
தெரியாது கூட
இருட்டில் தெரியும் சில நேரம்
-நட்சத்திரம் போல் ..

பொய் பேசும்
வாய் போலில்லாமல்
உண்மை பேசும்
கண்கள் ...

அந்த கலங்காத கண்களின்
கண்ணீர் யாவும் ,
யாரோ ஒருவரின் விரல் பிடித்து
உலகில் நடை போடவே
காத்திருகிறது கண்களுக்குள்..









2 comments:

suryajeeva said...

//தூசி பட்டு
கலங்கும் கண்களை விட ,
காட்சி பட்டு
கலங்க துடிக்கும்
கண்களின் வலி அதிகம் ..//

உண்மை... தூசி பட்டவுடன் கண்ணில் இருந்து உடனே வெளி வருகிறது கண்ணீர்.. ஆனால் கலங்கும் நெஞ்சால் கண்ணீர் விழி ஓரங்களில் நின்று கீழ் இறங்க நம் அனுமதி கேட்டு காத்திருக்கிறது முட்டி கொண்டு

jayaram thinagarapandian said...

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி ..


நட்புடன்
ஜெயராம் தி