Sunday, March 27, 2011

ஊஞ்சல் ..!


இலைகள் யாவும்
காம்பின்
நுனியில் ,
காற்றின் தாலாட்டில்
ஊஞ்சல்
ஆடுகிறது ...!

இருள் கண்ட காட்சி ...!


இருள்
கண்ட காட்சி மட்டும்
யாரும்
காண முடிவதில்லை,
இருளை தவிர ...!

வலித்துகள்கள் ...!


ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும் ,
மனதில் உடைந்து
வெளியே சிதறும்
வலிகள் ...!

Saturday, March 19, 2011

தீப்பொறி ..!பிடித்த இடத்திலிருந்து
பின் தொடர்ந்து செல்கிறது
தன் பயணத்தை நீட்டி கொண்டு தீப்பொறி
சிதறிவிடப்பட்ட எரி பொருளுக்காக ...!

போகும் பாதையில்
கோபமாய்
வழிபடும் இடர்களை
எரித்து
மிச்சத்தை
எச்சமாய்
வழித்தடமாக்கி விடுகிறது
மறந்துபோய் ...!

அதுவரை
யாருக்கும் 'தெரியாமல் இருக்க
இப்போது காட்டிவிட்டது
பாதையை ...!

தெரிந்துவிட்டது
குறிக்கோள் ,
இருப்பினும்
பின் தொடர்கிறது
அதன் நீளம் முழுக்க ....!

அடைவதையே
எண்ணிக்கொண்டு
தூரம்
காலம்
ஆபத்து
ஏதும் எண்ணவில்லை ...!

இறுதியாய்
வந்தது பயணத்தின்
முற்றுப்புள்ளியாய்
சிதறிய எரிபொருளின்
இடைவெளியில் !

தொடர்ந்தது
இந்த முற்றில் முடிந்தது ...!

இடைவெளியின்
முடிவில்
தொடர்ந்தது போய்கொண்டிருந்தது
அந்த எரிபொருளின் சிதறல்...!

இறுதியாய்
அடைந்த இடத்திலிருந்து
ஏக்கத்தோடு எரிந்து முடிந்தது
தீப்பொறியின் பயணம் ...!

Saturday, March 12, 2011

இரவே ...!


இரவே
நீ பகலின் வெளிச்சங்களை
சிறைபிடித்ததின்
சூட்சமம்
என்னவோ ..!

இரவே
உந்தன்
நிலவில் தான்
எங்கள் இரவின் விடியல் ...!

இரவே
பூக்கள் பிரித்த போது
முற்கள் குத்திய காயங்கள் கூட
பூவின் அழகு கண்டு மறைவது போல்
நீ சிறைகொண்ட சூரியனின்
பிரிவு தந்த சோகம் கூட
முழுமுகம் கொண்ட நிலவை
கண்டு மறைந்து போகும் ...!

இரவே
எத்தனை கோடி தலையணை
மந்திரங்கள்
பூஜிக்க படுகிறது
இரகசியமாய் ..!

இரவே
நீ கலப்பு திருமணத்தின் முன்னோடி
இனிப்பை மேலும் இனிப்பாக்கி
தேனை நிலவோடு இணைத்து
மணமுடித்து
தேன்நிலவு ஆக்கினாய் ...!

இரவே
எத்தனை தவுறுகள்
ஒளிந்து மறைந்து போகிறது
இரகசியமாய் ...!

இரவே
உந்தன் தனிமை மிகவும் கொடுமை
நிலவிடம் கேட்டுப்பார் தெரியும்
இரவின் தனிமை ...!

இரவே
சிலநேரம்
நிலவு கூட
பயந்து போகும்
கண்சிமிட்டி தன்னை துரத்தும்
நட்சத்திரம் கண்டு ...!
பயந்து
சிறிது சிறிதாக
ஒளிந்து
பின் அமாவாசையில்
மறைந்தும் போகிறது ..!

இரவே
சூரியன் செய்த தவறு என்ன
எதற்கு கைதியாய்
மாலையில் பூட்டி
காலையில்
விடுவிக்கிறாய் ...!

இரவே
நீ பூவுலகில்
மாயவுலகமே...!

என் விசையிழந்த திசைகள் ..!என் விசையிழந்த
திசை நோக்கி
பயணம் செய்தேன் ஒரு நாள் ..!

அங்கு
நான் தோல்விகளை
வென்றேன் ...!
வெற்றிகளை
தோற்றேன் ..!

எதை கொண்டாட
எதை வருத்தப்பட
என எண்ணி
வருத்தப்பட்டு கொண்டாடினேன் ..!

அங்கு முயற்சிக்கு
என்றுமே பலனில்லை ...!
தோல்வியே ஜெயம் ...!
முயற்சி தீவினையாக்கும் ...!

அது
என் எதிரிகளின்
கனவுப் பிரதேசம் ...!

என் தசைகளை ருசிக்காத
தோல்வியை ருசிக்கும்
பருந்துகளின்
சொர்க்க பூமி ...!

என் பாதம்
அந்த திசையில்
பட்டதுமே
முற்கள் குத்தின
இரத்தம் சொட்டின...!
என் வலிகளையும்
சத்தத்தையும்
இரத்தத்தையும்
உறியும்
காட்டேரிகளின்
உலகம் அது ...!

யார் செய்த சூன்யமோ தெரியவில்லை
ஒன்றுமே விளங்குவதில்லை ....!
இப்படி
என் விசையிழந்த
திசை நோக்கி
பயணம் செய்தேன் ஒரு நாள்...!

Monday, March 7, 2011

புத்தக தொழிலாளிபுத்தகத்தை
சுமந்து வருகிறான்
பள்ளியில் அல்ல,
கடையில்
-ஏழைச்சிருவன்..!

குப்பைக்கோழி....!


குப்பை
கிளறப்படுகிறது ,
கிளறுவது
கோழியல்ல
- ஏழைச்சிறுவன்..!

இருள்…!இருள் கண்டு
பயந்தவர்கள் கூட
கண் விழித்து
உறங்குவதில்லை…!

Sunday, March 6, 2011

கொலை...!


கொலை
செய்துவிட்டேன்,
குற்றம் யாருடையது
கத்தியுடையதா...?
என்னுடையதா..?

கனவு..!


விழித்திருந்தேன்,
உறங்கிவிட்டேன்,
எழுந்து
பார்த்தால்
கனவு...!

வேள்வி.... !


மரம்
வெட்டி நடக்கிறது,
மழை
வர வேண்டி
வேள்வி...!

கோபம்....!காற்றுகூட ஒரு நாள்
என் மீது கோபம் கொண்டது,
அப்போது தெரிந்தது
நான் இறந்து விட்டேன் என்பது...!

முத்த கல்வி.....முத்த கல்வி
நடக்கிறது வகுப்பறையில்,
அதனால்,
கல்வி ஒளி எங்கும் பிறக்கிறது ,
-கரும்பலகையில் சாக்பீஸ் ....!

Saturday, March 5, 2011

வறுமையின் நிறம் கருப்புவறுமையின் நிறம் சிகப்பாம் ,
எனக்கோ
வறுமையின்
நிறம் கருப்பு ..!

தொப்புள் கொடி அறுத்த முதல் நாளே ,
ஏனோ என உறவை தாயும் அறுத்துவிட்டாள் ..!

பால் கேட்டு அழுதிடும் எனக்கு
ஒரு வேலை பால் கூட தர தெம்பில்லை அவளுக்கு ..!
அவள் செய்தது பாவம் தான்
ஆனாலும் அவள் பாவம்...!

கருவறைக்குள்ளே இருட்டிலிருந்தும்
வாழ்க்கை வெளிச்சமாயிருந்தது ...!
இங்கே வெளிச்சம்
வாழ்க்கையை இருட்டடித்தது ...!

பிறந்த முதல் நாள்
தனியே அழுதேன் ..!
அன்று உணர்ந்தேன் ,
எனக்கு ஆறுதல் சொல்ல
யாரும் இல்ல ...!
பின் அழுகை
மரத்து மறந்து போனது ...!

தவழும் வயதில் உண்ட களிமண்
ருசித்ததால் ,
இன்னும் அதையே உண்கிறேன் ...!
களிமண் வைத்து பொம்மை செய்வார்கள்
நான் என் உடலை செய்தேன் ...!

கொடுக்கும் தெய்வம் கூரையை
பிய்த்து கொடுக்குமாம்
என் தெய்வம் வானம் பெய்து கொடுக்கும்
வானஊர்தியில்
உணவும் மருந்தும் ...!
அன்று தான் எனக்கு விருந்தும் ...!

குப்பைத்தொட்டியில் ,
தினமும் எனக்கு
மல்யுத்த போட்டி தான் குப்பைதொட்டியில்
தெரு நாய்களுடன்
மிச்ச மீதிக்காக ...!

நான் அனாதையில்லை
ஆதாம் ஏவாளின் உண்மை வாரிசு நான்
ஏனெனில் நான் ஆடையே அணிவதில்லை ...!

தினமும் சூரிய குளியல்தான்
உச்சிவெயிலில் ..!


என்னையே ஆச்சர்ய படுத்துவது
உண்ணாமலே என் வயிறு பெருத்துவிட்டதே ..!
சில நேரம் நான் பிள்ளை தாச்சியா என
என்னை மறந்து தோன்றுகிறது
என் வயிற்றை பார்க்கையில் ...!

காற்று நிறைந்த பலூன் போலும் ...!
பிறந்தது முதல்
என் தினசரி வேலை
உயிரோடிருப்பது ...!
மருத்துவர்கள் என்னை ஆய்வு செய்ய X-ரே தேவை இல்லை
உடலெங்கும் எலும்பு தெரிகிறதே ..!

இப்படித்தான்
வாழ்க்கை ...!
இப்போது சொல்லுங்கள்
வறுமையின் நிறம் கருப்பு தானே ...!

Wednesday, March 2, 2011

ஹைக்கூ -7...!

இதயமே ..!

இரண்டுபட்ட உறுப்பெல்லாம்
ஒன்றாக செயல் பட
ஒன்றுபட்ட இதயம்
நீயோ
சுத்தம்
அசுத்தம்
என பேதம் பார்த்து
செயல்படுகிறாயே ...!

உயர்திணை...!

ஓர் காகம் இறந்தால்
கூடி நின்று கரையும்
காகங்கள் ..!
ஓர் மனிதன் இறந்தால்
கூடி நின்று வெற்றி கொண்டாடும்
மனிதன்...!

குறிக்கோள்.!

இலக்கை
குறியாய் கொண்டு
அதையே வாழ்க்கையில்
கோலாக கொண்டால்
அதுவே
நமது குறிக்கோள் ...!

மழை...!

பூக்களை
கொலை செய்து
வாசம் தேடுகிறோம்
மரம் -மழை ...!

மழை...!

இடியின்
அதட்டலுக்கு
பயந்து சிந்திய
கண்ணீரோ
-மழை ...!


தனிமையின் துணையை தேடி !

தனிமையின் துணையை தேடி
தனிமையை தனியாய் விட்டு
செல்கிறேன் நான் ...!
தனிமையின் தனிமையை
போக்க
தனிமையில் இருக்கிறேன்
இப்போதைக்கு நான் ...!


இரத்தகடிதங்கள்...!

மரத்தின்
இரத்தத்தால்
செய்த
காகிகத்தால்
சில காதல்
கடிதங்கள் ...!


வறுமையின் வாசம் ...!

கோவில் தெருவில்
பூ விற்கும்
சிறுமியின்
வாழ்க்கை மட்டும்
மணப்பதேயில்லை ....!