Saturday, February 26, 2011

ஹைக்கூ -6...!

விலை ..!

ஒருவனே விதைத்தான்
ஒருவனே விற்றான்
அனைவருக்கும் ஒரே விலை
உழைப்பு ...!
இடையில் மனிதன் வந்தான்
விதைத்தான்
மாறிப்போனது
உழைப்பின் விலை ...!

மீன்களின் சிரிப்பு ...!

தொலைக்காட்சியில்
வருகிறோம் என
எண்ணி சிரிக்கிரது,
அந்த மீனவப்பிள்ளை,
தன் தந்தை நடுக்கடலில்
கொல்லப்பட்டதன்
விளைவுகள் புரியாமல் ...!

வறுமையின் சத்தம்...!

மின்சார இரயிலில்
கேட்கிறது ,
குருட்டு பிசைகாரனிடமிருந்து,
இரயில் சத்தத்தையும் தாண்டி ...!

துப்பாக்கியின் சத்தம்....!

துப்பாக்கியின் உண்மையான சத்தம் கேட்கிறது
துப்பாக்கி சூட்டில் அடிப்பட்ட ,
குழந்தையின் - அழுகுரலில்...!

யுத்தம் !

யுத்தங்கள் அனைத்தும்
அமைதியை நோக்கி தான்
நடக்கிறது உலகில் ,
அமைதியை
கல்லறையில் தேட ...!

திண்ணை தேடும் வீடுகள் ...!

ஓய்வு எடுக்க திண்ணை
தேடிய மனிதன் மறைந்து போய்
இப்போது ,
திண்ணைகள் வீடுகளை
தேடுகிறது ...!பாவ - மன்னிப்பு...!

மெழுகுவத்தியை
அழவைத்து ,
தேவனிடம்
பாவ - மன்னிப்பு ...!

பணம் !

ஏழைகளின்
அகராதியில் ,
அச்சுப்பிழைகள்
பணம் ...!

பசி ...!

மீதமான உணவை
தெருவில் கொட்டும் ஒவ்வொரு
பருக்கையிலும்
கூடுகிறது
ஏழையின் பசி ....!

Sunday, February 20, 2011

ஹைக்கூ -5

அழகு..!

பல இடங்களில் அழகு
நிறமாய் இருப்பது போல்
குணமாய் இருப்பது போல் ...!!!
இல்லை...!!!


மெழுகுவத்தி..!

இருட்டில் உன் பயணம் ஒளி பெற
நான் உன் வழியில்
தனியாய் அழுகிறேன்
- மெழுகுவத்தி ....:)வெற்றி உளி...!

வெற்றியின் முதல் பக்கம் எப்போதும் பார்க்க அழகாக தான் இருக்கும்
அதன் உள்ளே உள்ள வலிகள் தான் ,
வெற்றியின் வழிகளை
உளிகளாய்
செதுக்கியருக்கும்....!

உறவுகள்…!

காதுகளொடும்
வாயோடும்
உறவாடும் –கைபேசி
கண்களோடு உறவாடும் - தொலைக்காட்சி
இதனால் மனிதனும் மறந்து போனான்
மனிதனோடு உறவாட ...!


இனிப்பு...!

இனிப்பை விரும்பும் யாரும்
இனிப்பை விரும்பும் எறும்பிடம்
இனிப்பை போல்
இனிமையாய்
இருப்பதில்லை ...!இறுதிமுடிவு…!

அந்த மெகா தொடரின் இறுதிமுடிவை
எப்படியும் பார்க்க வேண்டுமென்று
உறுதியாய் இருந்த
அந்த கிழவியின் இறுதி ஆசையை
இறுதிவரை நிரைவேற்ற முடியவில்லை..!


வாழ்க்கை ரேகை...!

முதுமை
முகத்தின்
ஒவ்வொரு
சுருக்கங்களிலும் ,
கடந்து வந்த வாழ்க்கை
பாதையின்
சுவடுகள்....!


தனிமையின் துணைக்கு...!

என் தனிமையின் துணையை
தேடி தனிமையை
தனியாய் விட்டு
செல்கிறேன்
-இப்போதைக்கு நான்...!

நினைவுகள்..!


வட்டமான நினைவுகளின்
நீளத்தை,
விட்டமிட்டு அளக்க முடியாது!

மறக்க நினைப்பதையே
மறக்க செய்யும்!

நினைக்க நினைப்பதையே
நினைத்துக் கொள்ளும்..!

கட்டி போட்டதை,
எட்டி உதைத்து
இட்டு செல்லும்
நினைவுகளில்..!

நிஜங்களின் போலி
நகலாய்
நினைவுகள்..!

சில உண்மையின்
பிம்பமாய்,
கல்லறையாய்
நினைவுகள்..!

நினைப்பதால்
நினைவுகளல்ல!

நினைக்க வைப்பதால்
நினைவுகள்..!

Thursday, February 17, 2011

ஹைக்கூ - 4

கட்டாயம்..!

காட்சிகள்
சரியாக தெரிய
கண்ணாடி போட்டும்
தெரியாத வாறே
நடிக்க சொல்கிறார்கள்
-இது காலத்தின் கட்டாயம்…!


சுயதலைக்காதல்…!

நம்மை,
நம் முன்னின்று ,
நேரே காட்டும்
கண்ணாடி முன்பு ,
நம்மை,
நாம் காதலிக்கும்
தருணம்..!மிதிக்க...!

மிதிக்க
மிதிக்க சுமந்து செல்லும்,
மிதிவண்டி….!


கைம்பெண்…!

வெள்ளை கோளம் பூண்ட
மல்லி கூட வாசம் வீசும் போது!
வெள்ளை சேலை பூண்ட
பெண்ணின் வாழ்க்கை மட்டும்
வீணாகிறதே….!


மனிதயினம்..!

உயிர் மெய்யை சேர்ந்தால்
உயிரினம்..!
உயிர் மெய்யை சேர்ந்து
மனதோடு இருந்தால்தான்
மனிதயினம்…!


வெற்றி…!

வானுயர்ந்த சிகரம் கூட
அதன் மேல் ஏறி நின்றால்
உன் காலடி கீழே..!வெட்டு..!

வெட்டி எடுத்தேன்,
உயிர் பறிக்க இல்லை,
உயிர் விதைக்க,
மண்ணை – மண்வெட்டி


வாழ்வு…!
வாசம் வீசா காகிதப்பூவாய்
காலம் யாவும் வாழாமல்,
ஒருநாள் உயிர்த்தாலும்,
வாசம் வீசும் பூவாய்
வாழ்ந்து முடிப்போம்..!


தப்பு-தாளம்…!

தப்பை
சரியாய்
அடித்தால்
-அது தாளம்…!

உறவுகளின் தேவை…!

சில உறவுகளில்
இடைவெளிகள் தேவை,
ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்க…!

புகையின் வாசம்…!


மாநகரச்சாலை
ஓரப்பூங்காகளிலுள்ள
பூக்களும்
மணக்கிறது
புகையின் வாசமாய்…!

ஹைக்கூ -3

நிகழ்வுகள்..!

பிடிக்கவில்லை
கொலை செய்தேன்
தண்டனையில்லை,
நிகழ்வுகளை…!

வெற்றி-தோல்வி..!

தொடர்கிறேன்,
துரத்துகிறது
வெற்றி-தோல்வி..!
வி ண்மீன்..!
சிதறிவிடப்பட்ட
கோலங்களும்
அழகாக ஜொலிக்குமோ,
-விண்மீன்..!அருவி..!
காதல் கொண்ட
காமமோ,
-அருவி..!


இசை..!
சத்தத்தின்
பூப்பெய்தல்
-சுரங்கள்..!


முயற்சி..!

கேள்விக்கும்
பதிலுக்கும் இடைப்பட்ட
தூரம்தான் முயற்சி…!


யோசனை…!

தினமும் யோசித்து கொண்டிருக்கிறேன்
எது மாறாதது என்று?
சற்று நேரத்தில்
என் யோசனையே மாறிவிட்டது..!


யாருடைய குற்றம்..!

கொலை செய்துவிட்டேன்
குற்றம் யாருடையது,
கத்தியுடையதா?
என்னுடையதா?


விடுதலை..!

தினமும் காலை ,
பூக்கள் தன் சிறைக்கதவுகளை
திறக்கும்போது,
பூவிடமிருந்து வாசத்திற்கு
விடுதலை..!


ஏழைக்குழந்தை....!

ஏழைக்கு மட்டும் தான்
சந்தோசத்துக்கு கிடைக்கும்,
தண்டனை,
சாபம்-குழந்தை..!