Sunday, April 4, 2010

வலிகள்...!


எதிர்த்து பேசியதால் வந்த
தந்தையின் -வார்த்தைகள்.....!

நான் திட்டியதால் வழிந்த
தாயின் -கண்ணீர்...!

பார்த்தும் மலராமல் போன
தோழியின் -சிரிப்பு...!

கேள்விக்கு பதிலாய் வந்த
காதலியின் -மெளனம்....!

சொல்லாமல் போனதால்
நண்பனின் -கோபம்....!

இவையாவும்
வலிகள்,
துன்பத்தில் மனதில் பட்ட
திரவத்துளிகள்....!

No comments: