Wednesday, March 31, 2010

கண்ணீர் சிந்தா விழிகள்...!


கண்களின் பொறுப்பு
காட்சிகளை காண்பதல்ல,
உணர்சிகளை காண்பிப்பதும்..!

மகிழ்ச்சி,
சோகம்
கோபம்
ஏக்கம்
என அனைத்தும்
தெரிவது,
இந்த கண்களில்..!

கண்களும்
மொழி பேசும்
கண்ணீராய்..!

மூடிக்கொண்டும்
பார்க்கும்
கனவாய்..!

ஆயினும் சில தருணங்களுண்டு,
அங்கே,
மனம்
வலிகண்டிருக்கும்,
காரணமுமிருக்கும்,
கண்ணீர் மட்டும் சிந்தாது..!

அப்போது காணலாம்,
கண்ணீர் சிந்தா விழிகளை,,,!